Posts

Showing posts from March, 2017

கவிதை

கவிதை  வார்த்தைகள் ஆயிரம் ! வரிகள் ஆயிரம் ! பொருள் ஆயிரம் ! சிந்தனைகள் ஆயிரம் ! இவை அனைத்தும் சேர்ந்து "கவிதை  " ஆவது சில தருணங்களில் மட்டுமே ! 

ஏமாற்றம்

ஏமாற்றம்  என் விழிகள் அவள் விழிகளை சந்திக்கும் என்று அவளைத்  தாண்டி சென்றேன் ஆனால் கிடைத்தது என்னவோ " ஏமாற்றம் " தான் !

நாண்

நாண்  அவள் ஓர விழிகளில் நாண் ஏற்றினாள் வீழ்ந்தது என் இதயம் கனியாய் !

திறமை

திறமை உன் திறமையை முதலில் நீ அறிந்துகொள் பின் இந்த உலகமே அறிந்துகொள்ள முற்படும் 

புதிர்

புதிர்   பலரும் உன்னை ஆராய முற்படலாம் நீ புதிராக இருக்கும் வரை 

சிறப்பு

பக்தியில் பூக்களின் இருப்பு சிறப்பு ! கோவிலில் மணியின் இருப்பு சிறப்பு ! பூஜையில் கற்பூரத்தின் இருப்பு சிறப்பு ! கோடையில் நிழலின் இருப்பு சிறப்பு ! செயலில் தெளிவின் இருப்பு சிறப்பு ! காட்சியில் இயற்கையின் இருப்பு சிறப்பு ! வானில் நிலவின் இருப்பு சிறப்பு ! இல்லத்தில் நிம்மதியின் இருப்பு சிறப்பு ! பேச்சில் நல்லது இருப்பு சிறப்பு ! பூமியில் மரங்களின் இருப்பு சிறப்பு ! மரங்களால் இயற்கைக்கு சிறப்பு!

தனிமை

காலை பொழுதில் பகலவன் துணை! பகல் பொழுதில் வெயில் துணை! அந்திப் பொழுதில் தென்றல் துணை ! இரவு பொழுதில் நிலா நட்சத்திரங்கள் துணை ! இவை அனைத்தும் துணை இருந்தும் மனித மனம் ஏனோ தனிமையில் !